திருக்கோயிலின் புகழ் வரலாறு

சித்தர்களின் பூமியில் மீண்டும் ஒரு அதிசயம்.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இறை சக்திகளின் உறைவிடமாக விளங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச நன்மைக்காகவே அமைக்கப்பட்ட முதல் ஆலயம் ஸ்ரீ முத்தப்பர் கருப்பசாமி ஆலயம் ஆகும்.

2021 ஆம் ஆண்டில் கொரோனா என்னும் கொடிய அரக்கனிடமிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, இந்த பிரபஞ்ச சக்தியின் இயக்க ஆற்றலை அதிகப்படுத்த, வானத்தில் இருந்து வந்த வெள்ளை சிவலிங்கத்தை தன் தியானத்தின் மூலம் பார்த்து, இறைவனின் கட்டளைப்படி, எந்தவிதமான திட்ட முன்னேற்பாடுகளும் இன்றி வெறும் 27 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது தான் 27 அடி உயரத்தில் அமைந்துள்ள சிவசக்தி அம்சமான வெள்ளை சந்திர லிங்கம்.

கருவறையில் சிவனின் அம்சமாக முத்தப்பசாமி நெற்றியில் திருநீற்று பட்டையுடனும், விஷ்ணுவின் அம்சமாக கருப்பசாமி நெற்றியில் திருமண் திருநாமத்துடன் சிவ-விஷ்ணு அம்சத்தில் பிரபஞ்ச நாதரோடு இணைந்து காட்சி அளிக்கும் உலகின் முதல் ஆலயம்.

ஆணும் பெண்ணும் சரிசமமாக இணைந்து இருக்கும் சிவசக்தி தன்மையின் அளப்பரிய ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ள வெள்ளை சந்திர லிங்கமானது, 27 நட்சத்திரங்களின் சக்தியையும் உள்ளடக்கியுள்ளது.

இறையருள் மட்டுமே நம்மை எக்காலத்திலும் வழிநடத்தும் என்பதை உணர்த்தும் பொருட்டு, அதையே மூலதனமாக வைத்து, இடப்பற்றாக்குறையும் பொருள் பற்றாக்குறையும் இருந்த நிலையிலும், முத்தப்பரின் மீது கொண்ட ஆத்மார்த்தமான பக்தியுடன் கூடிய நம்பிக்கையோடு , அவரின் வழிகாட்டுதல் படி , ஆன்மீக அன்பர்களின் அயராத உழைப்பால், அனுதினமும் அரும்பாடுபட்டு அனைத்து மக்களின் நலனுக்காகவும் வெறும் 27 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது.

லிங்கமே கருவறையாக இருக்கும் முதல் ஆலயம் இதுவே ஆகும்.

Our Core Value

Our core values focus on devotion, compassion, service, community, and spiritual growth.

 

They guide every temple program, ritual, and service to nurture faith and community well-being

Yes! Everyone is welcome to join and contribute, regardless of age or background.

 

Volunteers play a key role in rituals, events, and community service, embodying devotion and service.

They provide guidance, strengthen faith, and create a harmonious, caring temple community.