Special Events

ஸ்ரீ முத்தப்பர் கருப்பசாமி ஆலயத்தில் நடைபெறும் முக்கியச் சிறப்பு வழிபாடுகள்

நாள் / நிகழ்ச்சிநேரம்நிகழ்வு / பூஜை
அமாவாசைமாலை 6:00அருள் வாக்கு / குறி சொல்வது (முத்தப்பர்)
திங்கட்கிழமைமாலை 6:30அருள் வாக்கு / குறி சொல்வது (கருப்பசாமி)
பௌர்ணமிமாலை 7:00சத்யநாராயண பூஜை
பிரதோஷம்மாலை 7:00சித்தர் பூஜை
அஷ்டமிமாலை 6:00அஷ்டமி ஹோமம்
சங்கட சதுர்த்திமாலை 7:00சங்கட சதுர்த்தி பூஜை

 

ஸ்ரீ முத்தப்பர் கருப்பசாமி ஆலயத்தில் நடைபெறும் முக்கியச் சிறப்பு வழிபாடுகள் பின்வருமாறு:

அமாவாசை: மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று, மாலை 6 மணிக்கு, முத்தப்பரின் உபதேசம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

திங்கட்கிழமை: வாரம் தோறும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு, கருப்பசாமி அருளால் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லப்படுகிறது.

பிரதோஷம்: அனைத்துப் பிரதோஷ தினங்களிலும், பிரபஞ்ச நாதருக்குச் சிறப்பு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

பௌர்ணமி: பௌர்ணமி தினங்களில், சத்தியநாராயண பூஜை நடைபெறுகிறது.

வளர்பிறை சதுர்த்தி: வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று, சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி: தேய்பிறை அஷ்டமி தினங்களில், அஷ்டமி ஹோமம் நடைபெறுகிறது.

ஆடி வெள்ளி: அனைத்து ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் பிரபஞ்ச நாதருக்கு சிறப்பு அம்மன் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

கந்த சஷ்டி: வருடம் தோறும் வரும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விரதத்தின் ஆறு நாட்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

மகா சிவராத்திரி: ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியன்று இரவில், சிறப்பு ஆறுகால பூஜைகளுடன், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

அனுமன் ஜெயந்தி: ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

கிருஷ்ண ஜெயந்தி: ஆண்டுதோறும் வரும் ஆவணி மாதத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி அன்று முத்தப்பர் கருப்பசாமிக்கு சிறப்பு அலங்கத்துடன் விஷேச தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

ஆண்டு உற்சவம்: வருடம் தோறும் பூக்கூடை வழிபாட்டுடன் கூடிய ஆண்டு உற்சவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

Special Events – FAQs

We hold regular poojas and rituals on Ammavasi, Pournami, Pradosham, Ashtami, Sankata Sthurthi, and Mondays.

Event timings range from 6:00 PM to 7:00 PM depending on the occasion.

Muthappar, Karuppu Saami, and Lord Sathya Narayana are the primary deities for these rituals.

Yes, all devotees are welcome to participate in prayers and rituals.

Devotees can offer flowers, fruits, and donations; specific instructions are provided during each pooja.